Home இலங்கை சமூகம் யாழ். குருநகர் கடற்கரையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

யாழ். குருநகர் கடற்கரையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்கரைப் பகுதி ஒன்றில் வைத்து ரி 56 ரக துப்பாக்கியொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பாரப்படுத்தல்

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக காவல்துறையினரின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த கட்ட
நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் பாரப்படுத்த காவல்துறையினர்  நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/OXU2KeYmc2w

NO COMMENTS

Exit mobile version