Home இலங்கை குற்றம் கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

0

புதிய இணைப்பு

மினுவாங்கொடை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காணமடைந்தவர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும்,
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு தற்போது கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் கெஹெல்பத்த பத்மே இருப்பதாக தெரியவந்துள்ளது.  

இந்தநிலையில், கெஹெல்பத்தர பத்மே தொடர்பான பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவரும் நிலையில், இன்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவமும்  மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவிப்பதாய் அமைந்துள்ளது. 

முதல் இணைப்பு

மினுவாங்கொடை பத்தண்டுவன சந்தியில் இன்று(26) சற்றுமுன்னர் 11.17 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

@tamilnewssrilanka சற்றுமுன்னர் மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! #colombo #colombonews #latestnews #latestnewsupdates #trandingvideo ♬ original sound – TAMIL NEWS

துப்பாக்கிச் சூடு

முதல்கட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 36 வயதுடைய நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


NO COMMENTS

Exit mobile version