Home உலகம் வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி: பலருக்கு காயம்

வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி: பலருக்கு காயம்

0

அமெரிக்காவில் (United States) குடியிருப்பு பகுதி ஒன்றில் பொதுமக்கள் மீது மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது மிச்சிகனின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன்  19 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்த நேரத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் தடவியல் பணியாளர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

மேலும் வார இறுதி வரை தங்கள் வேலையைத் தொடருவார்கள்” என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gun-shooting-in-usa-michigan-2-killed-19-injury-1720462600

NO COMMENTS

Exit mobile version