Home முக்கியச் செய்திகள் கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான டேன் பிரியசாத் உயிரிழப்பு

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான டேன் பிரியசாத் உயிரிழப்பு

0

புதிய இணைப்பு

நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றிரவு 9.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூடு 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று (22) இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்  டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.dailymotion.com/embed/video/x9ic02i

NO COMMENTS

Exit mobile version