Home சினிமா அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல்கள் குறித்து கூறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.. சரவெடி தான்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல்கள் குறித்து கூறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.. சரவெடி தான்

0

அஜித்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மொத்தமும் வெளிநாட்டில் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.

இதில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய ஸ்டண்ட் விஷயங்கள் அமைந்துள்ளது என்பது சில வீடியோ வெளியான போதே நமக்கு தெரிந்திருக்கும்.

ஜீ தமிழில் முடிவுக்கு வரப்போகும் ஹிட் ஷோ.. Grand Finale, முழு விவரம்

அஜித் தனது கார் ரேஸிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வர அண்மையில் அவருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது.

குட் பேட் அக்லி

கார் ரேஸிங்கில் கலந்துகொள்ள முடிவு எடுத்ததால் விடாமுயற்சி முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி நடித்து, டப்பிங்கையும் வேகமாக முடித்துள்ளார்.

விடாமுயற்சி பிப்ரவரி 6ம் தேதி வெளியாக ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் இசை குறித்து ஜி.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில், இந்த படத்தில் தன்னுடைய 100 % உழைப்பை கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்வீட் மூலம் தான் குறிப்பிட்டது போலவே இந்த படத்தின் இசை மாஸ்க்கெல்லாம் மாஸாக அமைய வேண்டும் என்று தான் கருதுவதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version