Home உலகம் கனடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு

கனடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு

0

கனடாவில் கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை இரண்டு வீதமாக உயர்வடைந்துள்ளது.

குறித்த விடயம், கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை இரண்டு வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில்நுட்ப துறையில் ஏற்படும் புதிய தொழிலாளர்கள் தேவையால், இந்நிறுவனங்களில் பல புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தொழில்நுட்ப துறையில் மட்டுமல்லாது சேவை துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமான துறைகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் பல பகுதிகளில் பொதுமக்களின் வருமான நிலை மேம்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version