Home சினிமா ஹரி ஹர வீரமல்லு வரலாறு காணாத நஷ்டம்.. இத்தனை கோடிகளா

ஹரி ஹர வீரமல்லு வரலாறு காணாத நஷ்டம்.. இத்தனை கோடிகளா

0

ஹரி ஹர வீரமல்லு

க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இப்படத்தில் கதாநாயகனாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

மேலும், நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க சத்யராஜ், நாசர், பாபி தியோல், Nargis Fakhri, Nora Fatehi ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்தது.

வரலாறு காணாத நஷ்டம்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் சந்தித்துள்ளது. வரலாறு காணாத ரூ. 100 கோடி நஷ்டம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் விநியோகஸ்தர்களுக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் பவன் கல்யாணின் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Source: https://cineulagam.com/article/hari-hara-veeramallu-historic-box-office-loss-1754987863

NO COMMENTS

Exit mobile version