Home இலங்கை சமூகம் என்ன செய்துக் கொண்டிருக்கிறது ஹட்டன் நகர சபை… நிர்க்கதியாய் நிற்கும் செனன் மக்கள்

என்ன செய்துக் கொண்டிருக்கிறது ஹட்டன் நகர சபை… நிர்க்கதியாய் நிற்கும் செனன் மக்கள்

0

 ஹட்டன் – செனன் தோட்டம் KM பிரிவில் நேற்றையதினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நேற்று இரவு 07.30 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் உள்ள பெரும்பாலான  வீடுகள் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்தன.

இதன்போது, வீட்டின் உடமைகள் அனைத்தும் சேதமடைந்ததுடன், தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

உடை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உடமைகள் எதனையும் பொதுமக்களால் மீட்டெடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இதன்போது ஏற்பட்டது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஹட்டன் நகரசபைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்த நிலையில், அப்பகுதி மக்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், ஹட்டன் நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் கிட்டத்தட்ட சம்பவம் இடம்பெற்று 2 மணித்தியாலங்களின் பின்னரே வருகைத் தந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த போது பெரும்பாலும் பொதுமக்கள் தீயிணைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், சட்டம் பேசும் இந்த அரசாங்கம் நெருக்கடியான நேரங்களில் எங்களை ஏன் மறந்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.    

NO COMMENTS

Exit mobile version