Home இலங்கை கல்வி தொடரும் மோசமான வானிலை..! நாட்டில் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

தொடரும் மோசமான வானிலை..! நாட்டில் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

0

மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.   

Source: https://tamilwin.com/article/hatton-zone-school-to-be-closed-tomorrow-1778770726

NO COMMENTS

Exit mobile version