முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (29) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது
புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47)
என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

முரண்பாடு

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர், அவரது குடும்பத்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு
மாதங்களுக்கு முன்னர் அவர்களை பிரிந்து வந்து இளவாலை- வசந்தபுரம் பகுதியில்
உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் | Heavy Alcohol Consumption Men Death For Jaffna

இந்நிலையில் அவர் இன்றையதினம், அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக்
காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்!

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்!

பிரேத பரிசோதனை

இவ்வாறு மீட்கப்பட்டவரது சடலம்
மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை
காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் | Heavy Alcohol Consumption Men Death For Jaffna

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்