திருகோணமலையில் கனமழை காரணமாக விதைத்து ஒரு சில
நாட்கள் கடந்த நிலையில் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது.
தம்பலகாமம் ,கிண்ணியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (13) பெய்த கனமழை காரணமாக இடம்பெற்றுள்ளது.
நெற் செய்கை
இந்தநிலையில், தம்பலகாமம் கோயிலடி தாயிப் நகர் வீதியை அண்மித்த பகுதி வயல் நிலங்கள் மற்றும்
கிண்ணியா சூரங்கல் கற்குழி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களே இவ்வாறு நீரில்
மூழ்கியுள்ளன.
பெரும்போக நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கை மேற்கொண்டு
ஓரிரு நாட்களின் பின் கனமழை பெய்ததால் பல ஏக்கர் நிலங்கள் நீரில்
மூழ்கியுள்ளது.
அத்தோடு, தற்போது சில பகுதிகளில் நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக நீரில் மூழ்கிய வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
