Home இலங்கை சமூகம் மத்திய மலைநாட்டில் தொடரும் மழை : திறக்கப்பட்ட வான் கதவுகள்

மத்திய மலைநாட்டில் தொடரும் மழை : திறக்கப்பட்ட வான் கதவுகள்

0

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின்
நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கெடுத்து நீரேந்தும்
பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நீரினை வெளியேற்றுவதற்காக இன்று (26) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

வான் கதவுகள் திறப்பு 

இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள்
திறக்கப்பட்டுள்ளதுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால்
நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள்
அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை
பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/OoaCbkjVHPI

Source: https://ibctamil.com/article/heavy-rain-up-country-weather-in-sri-lanka-1732620842

NO COMMENTS

Exit mobile version