Home உலகம் பிரித்தானியாவில் உலங்கு வானூர்தி விபத்து : நால்வர் நிலை கேள்விக்குறி

பிரித்தானியாவில் உலங்கு வானூர்தி விபத்து : நால்வர் நிலை கேள்விக்குறி

0

பிரித்தானியாவில் (United Kingdom) விமான பயிற்சியின் போது 4 பேர் வரை பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஐல் ஆஃப் வைட் தீவில் நடந்த விமான பயிற்சியின் போது ஷாங்க்ளின் அருகே காலை 9.20 மணியளவில் உலங்கு வானூர்தி ஒன்று வயல் பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது.

காவல்துறை அதிகாரிகள்

பயிற்றுவிப்பாளர் உட்பட 4 பேர் விமானத்தில் பயணித்த நிலையில், ஒருவர் சிகிச்சைக்காக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.மற்ற மூவரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் விபத்தின் காரணமாக A3020 ஷாங்க்ளின் சாலையை மூடியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய 4 பேர் சாண்டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதை உலங்கு வானூர்தியை இயக்கிய நார்தும்பிரியா ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய் சமீபத்திய தகவலின் படி, உலங்கு வானூர்தி விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version