Home இலங்கை இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா அன்பளிப்புச் செய்த உலங்கு வானூர்திகள்

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா அன்பளிப்புச் செய்த உலங்கு வானூர்திகள்

0

அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு (SLAF) வழங்கப்பட்ட பத்து (10) வுர்-57 ‘சீ ரேஞ்சர்’ ( ‘Sea Ranger’)பல்நோக்கு உலங்கு வானூர்திகள் கடல் வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்த விமானங்களின் வருகை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும், இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகும் என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை

இரத்தமலானையில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த ஹெலிகொப்டர்கள் தற்போது பொருத்துப் பணிகள் மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை விமானப்படை மேலும் கூறியுள்ளது.

தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த விமானங்கள் சேவையில் சேர்க்கப்பட்டு செயல்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

இந்த TH-57 ரக உலங்கு வானூர்திகள் , இலங்கை விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்துவதோடு, பரந்த அளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானூர்தியானது, முதன்மையாக விமானிகளுக்கான பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு (HADR) நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படும் பிற பொதுச் சேவைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

Source: https://tamilwin.com/article/helicopters-donated-us-air-force-arrive-sri-lanka-1780473217

NO COMMENTS

Exit mobile version