Home உலகம் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை போட்டுத்தள்ளிய இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை போட்டுத்தள்ளிய இஸ்ரேல்

0

லெபனானில் (Lebanon) உள்ள ஷப்ரா பகுதியில், இஸ்ரேலிய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் லிட்டானி துறை மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்ப்பட்டடுள்ளது.

இன்று அதிகாலை, தெற்கு லெபனானில் உள்ள ஷப்ரா பகுதியில், இடம்பெற்ற இந்த தாக்குதலில் முகமது கட்டார் அல்-ஹுசைனி என்ற தளபதியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த தாக்குதலை இஸ்ரேலிய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களின் போது அல்-ஹுசைனி நஹாரியா, ஹைஃபா மற்றும் பிற நகரங்களை நோக்கி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version