Home உலகம் ஹிஸ்புல்லா புதிய தலைவரின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் : மிரட்டுகிறது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா புதிய தலைவரின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் : மிரட்டுகிறது இஸ்ரேல்

0

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட Naim Qassem நீண்ட நாட்களுக்கு நிலைக்க மாட்டார் எனவும் அவரின் நியமனம் தற்காலிகமானது எனவும் இஸ்ரேல்(israel) பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் புதிய ஹிஸ்புல்லா தலைவரின் புகைப்படத்தை பகிர்ந்து அவரின் நியமனம் தற்காலிகமானது எனவும் அவருக்கான கவுன்ட் டவுன் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் இன்று நியமனம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று(29) ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக காசிம் அறிவிக்கப்பட்டார்.

எதிர்பார்க்கப்பட்ட வாரிசு ஹஷேம் சஃபிதீன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

Source: https://ibctamil.com/article/hezbollah-leader-temporary-appointment-1730214025

NO COMMENTS

Exit mobile version