முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு!

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நேற்று (28)நடைபெற்றது.

அதிபர் தேர்தல் எப்போது..! தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தல் எப்போது..! தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் 

இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில்
காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில்
07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால்
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு! | High Security Zone 7 Temples Exempted For Worship

கட்டுவன், வசாவிளான்
மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு
நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த
ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான
போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன்
கலந்துரையாடப்படவுள்ளது

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்

அனுமதி

மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்
என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம்
தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட
ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் கூறினார்கள்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு! | High Security Zone 7 Temples Exempted For Worship

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள்
திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார்
அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல்
மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி : மீண்டும் வேலைநிறுத்தத்தில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்

அரசுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி : மீண்டும் வேலைநிறுத்தத்தில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்

ஆளுநர் பணிப்புரை

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல்
செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் 

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு! | High Security Zone 7 Temples Exempted For Worship

அத்துடன் யுக்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான
புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில்
ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்