பிக்பாஸ்
பல வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து தென்னிந்திய சின்னத்திரைக்கு வந்த ஒரு பெரிய நிகழ்ச்சி. 100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து விளையாடும் ஒரு நிகழ்ச்சி.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இதுவரை வெற்றிகரமாக 7 சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தது, ரசிகர்கள் இப்போது 8வது சீசனிற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 8வது சீசன் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிவிட்டதாக கூறிவிட்டார், அடுத்து யார் அந்த இடத்திற்கு வருவார் என தெரியவில்லை.
அதிக சம்பளம்
தற்போது 8வது சீசனிற்கான போட்டியாளர் தேர்வு பரபரப்பாக நடந்துவரும் நிலையில் இதுவரை கலந்துகொண்ட போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.
இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசன்களில் அதிக சம்பளம் வாங்கியது நடிகை விசித்ரா தானாம்.
ஒரு நாளைக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டதாம், 97 நாட்களுக்கு அவர் ரூ. 29,10,000 சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 7 சீசன்களில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விசித்ரா தானாம்.
Source: https://cineulagam.com/article/highest-paid-contestant-in-bigg-boss-show-1723784532
