முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல்

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 55 இந்துக் கடவுள்களின் கற்சிற்பங்கள் மசூதிக்குள் இருப்பதாக தொல்லியல் ஆய்வின் அறிக்கை கூறுகின்றது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அருகில் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆய்வின் பின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“15 சிவ லிங்க சிலைகள், 3 விஷ்ணு சிலைகள், 3 கணேசன் சிலைகள், 2 நந்தி சிலைகள், 2 கிருஷ்ணர் சிலைகள், 5 அனுமர் சிலைகள் மசூதிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

ஞானவாபி மசூதி

மேலும்,
ஞானவாபி மசூதியானது இந்துக்கோயிலை இடித்து அதன் மீது எழுப்பப்பட்டிருப்பதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | Hindu Deity Sculptures Gyanvapi Vaaranasi India

17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் ஆட்சியின்போது இங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டு, அதன்மீது இந்த இஸ்லாமியக் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில சிலைகளும், தூண்களும் சிதைக்கப்பட்டு மறுபயன்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதிக்குள் கைகள் இல்லாத ஆண் தெய்வத்தின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல் போன இளைஞன்! காவல்துறையினரின் உதவியை நாடிய உறவினர்கள்

யாழில் காணாமல் போன இளைஞன்! காவல்துறையினரின் உதவியை நாடிய உறவினர்கள்

இந்து தெய்வங்களின் சிலைகள்

அதன் வலது கை தூக்கி இருப்பது போன்ற வடிவிலும், இடது கை உடலின் மேல் செல்வது போலவும், வலது கால் முட்டிக்கு மேல் இருப்பதால் இது கிருஷ்ணரின் சிலையாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்கள்: ஆய்வில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | Hindu Deity Sculptures Gyanvapi Vaaranasi India

இந்த ஆய்வில் 93 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்
அதில் 40 கிழக்கிந்திய கம்பெனியின் நாணயங்களும், 21 விக்டோரிய மகாராணி நாணயங்களும், 3 இரண்டாம் ஷா அலாம்பாட்ஷா நாணயங்களும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுப் போன்று மற்ற சிலைகள் இந்துசிலைகளென எப்படி முடிவு செய்யப்பட்டது என்ற விவரங்களு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டு, ராமர் கோயில் எழும்பி திறப்பு விழா நடந்துமுடிந்துள்ள நிலையில், இந்த மசூதி மீது அனைத்து இந்து அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்