சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சட்டத்தை மதித்து சிறைச்சாலையில் காலத்தை கழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு வசதிகள் எதையும் அவர் கோரவில்லை என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட போது, பெண் கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த ஹிருணிகா, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
பெண் கைதி
பின்னர் அவர் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
ஹிருணிகா அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பெண் கைதிகளுடன் தனது நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு அவரிடமிருந்து எந்த இடையூறும் இல்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைக் கைதியாக இருப்பதால் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களைப் பெறும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.
அதற்கமைய, சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை ஹிருணிகா பெற்றுக்கொண்டுள்ளார்.
மருத்துவ அறிக்கை
இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மருத்துவ அறிக்கை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.