Home இலங்கை கல்வி யாழ். மல்லாகம் விசாலாட்சி தரம் 1 மாணவிக்கு விஞ்ஞானத்துறையில் கிடைத்த கௌரவம்

யாழ். மல்லாகம் விசாலாட்சி தரம் 1 மாணவிக்கு விஞ்ஞானத்துறையில் கிடைத்த கௌரவம்

0

 தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் விஞ்ஞானத்துறை சார் செயற்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18.09.2026) பண்டாரநாயக்கா சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன்
கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது
தொடர்பான அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்து “இயற்கை ஆர்வம் மிக்க சிறுமி”
(Kid Naturalist) எனும் சான்றிதழைப் பொற்றுக் கொண்டார்.

மாணவிக்கு கிடைத்த சான்றிதழ்

இம்மாணவிக்கான சான்றிதழும், பரிசிலும் பிரதமரும்,கல்வி அமைச்சருமான
ஹரிணி அமரசூரியவினால் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
வைத்து வழங்கப்பட்டது. 

Source: https://ibctamil.com/article/honor-bestowed-upon-a-jaffna-student-1789829949

NO COMMENTS

Exit mobile version