திம்புல பத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று கடுமையாக
சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பகுதியில் (21) பிற்பகல்
வீட்டின் மீது ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்ததில் வீட்டிற்கு பலத்த சேதம்
ஏற்பட்டதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில்
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையே இதற்கு காரணம் எனவும் குறித்த
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு படுக்கையறை முற்றாக சேதம் அடைந்துள்ளது என
வீட்டின் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர்கள் இடிந்து விழும் அபாயம்
மேலும் மண் மேடு இடிந்து விழுந்து வீட்டின் மற்ற அறைகளின் சுவர்கள் இடிந்து
விழும் அபாயம் இருப்பதால், வீட்டில் வசிக்கும் 05 பேர் உறவினர் வீட்டில்
தற்காலிகமாக தங்க வைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மண்சரிவினால் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் சேதமாகி உள்ளதுடன் சேத
விபரம் தொடர்பில் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தகவல்கள் சேகரித்து
வருகின்றனர்.
சம்பவம் குறித்து திம்புல பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
