Home ஏனையவை வாழ்க்கைமுறை ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..

0

அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை பிரகாசமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

எனவே இதற்காக அவர்கள் செயற்கையான இரசாயனங்களை பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே, எப்போது இயற்கையான முறையில் அழகை பராமரிப்பு மிகவும் சிறந்தது.

சரும பளபளப்பு

தினசரி குறைந்தது 3 – 4 லிட்டர் அளவில் சாதாரண தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும்.

பெண்கள் தினமும் தலை குளிப்பது நல்லது, முடியாதவர்கள் வாரத்தில் 1- 2 முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை குளித்தால் மிகவும் நல்லது.

உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடிய உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் (Fried foods) தவிர்க்க வேண்டும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் பல்வேறு பழ வகைகளிலிருந்து நேரடியாக கிடைப்பதால் தினமும் பழங்கள் சாப்பிடுவது, அதிலும் சிவந்த நிறப்பழ (தக்காளி, மாதுளம்பழம், பப்பாளி, சிவப்பு கொய்யாக்காய், நாவல்பழம், எழந்தப்பழம்) வகைகள் உட்கொள்வது தோல் வறட்சி வராமல் தடுக்கும்.

தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.

தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும்.

தூங்குவதற்கு முன்

இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்கள் எலுமிச்சை பானம் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்).

நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். கரட் மற்றும் வெங்காயத்தை சாலட் போல் கலந்து அடிக்கடி காலையில் சாப்பிடலாம். வாரத்தில் 2 முறை வெண்ணெய் சாப்பிட்டு வரலாம்.

தினமும் இரவில் படுக்கும் போது ஒலிவ் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம்.

வாரத்தில் 1-2 முறை ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்த்து 1/2மணி நேரம் கழித்து முகம் கழுவினால், தோல் அழகாக இருக்கும்.

பளபளப்பான முகம்

அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து  முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும்.

முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும்.

பச்சை பயறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version