Home ஏனையவை வாழ்க்கைமுறை இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

0

ஸ்கிரப் போன்ற அழகு சாதனப் பொருள்களின் கலவை பலவற்றிலும் ரோஸ் வாட்டர் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றது.

முகத்தையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைக்கவும் இந்த ரோஸ் வாட்டர் அதிகம் உதவுகின்றது.

இந்தநிலையில், இரசாயனக் கலப்பின்றி வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிக்கும் முறை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்,
  1. புதிய ரோஜா இதழ்கள் – 3 கப்

  2. காய்ச்சி வடிகட்டிய நீர் – 1 கப்
  3. சுத்தமான பானை

  4. வடிகட்டி
  5. கண்ணாடி பாட்டில் – ஸ்ப்ரே பாட்டில்

தயாரிக்கும் முறை
  1. ரோஜா இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும்.
  2. உலர்ந்து எடுத்தால் ஒரு கப் அளவு போதுமானது.
  3. பானையில் இதழ்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
  4. இதழ்கள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  5. இதை அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  6. அவை நன்றாக கொதித்து அதன் நிறங்கள் இழக்கும் வரை விடவும்.
  7. தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கட்டும்.
  8. பிறகு இதை குளிரவைக்கவும்.
  9. நன்றாக குளிர்ந்ததும் கலவையை வடிகட்டி இதழ்களை வெளியேற்றவும்.
  10. மஸ்லின் துணியை கொண்டு வடிகட்டிவிடவும்.
  11. இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விடவும்.
  12. ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

NO COMMENTS

Exit mobile version