Home சினிமா நீங்க தான் என் முதல் டீச்சர்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை பற்றி டாப் ஹீரோ நெகிழ்ச்சி

நீங்க தான் என் முதல் டீச்சர்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை பற்றி டாப் ஹீரோ நெகிழ்ச்சி

0

நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் பிரபலம் ஆன ஹீரோ என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல முன்னணி ஹிந்தி நடிகர்களே அவருக்கு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஹிரித்திக் ரோஷன்

இந்நிலையில் ரஜினி தான் எனது முதல் டீச்சர் என நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பதிவிட்டு இருக்கிறார். 1986ல் வெளிவந்த Bhagwaan Dada என்ற படத்தில் ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக ஹிரித்திக் ரோஷன் நடித்து இருப்பார்.

ரஜினி 50 வருடங்கள் நிறைவு செய்திருப்பதற்கு வாழ்த்து கூறி இருக்கும் ஹிரித்திக் ரோஷன் “உங்கள் அருகில் தான் நடிகராக முதல் படியை தொடங்கினேன், தொடர்ந்து inspiration ஆக இருங்கள்” என கூறி இருக்கிறார். 

ஹிரித்திக் நடித்த வார் 2 நாளை ரிலீஸ் ஆகும் ரஜினியின் கூலி உடன் பாக்ஸ் ஆபிசில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version