Home இலங்கை குற்றம் எரியூட்டப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள்

எரியூட்டப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள்

0

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 500 கிலோ
ஹெரோயின் போதைப்பொருட்கள், எதிர்வரும் திங்கட்கிழமையன்று, புத்தளத்தில்
எரியூட்டப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற சாட்சியமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெரோயின்
போதைப்பொருட்களே, புத்தளம், பாலாவி என்ற இடத்தில் வைத்து எரியூட்டப்படவுள்ளன.

பொலிஸ் தரப்பு

இந்தப் போதைப்பொருட்களில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில்
கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெரோயினும் அடங்கும்.

இந்த சம்பவத்தின்போது, ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்து
கைப்பற்றப்பட்ட 243.052 கிலோ ஹெரோயின் கையிருப்பும் இதில் அடங்கியுள்ளது.

இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை காலை
7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்கள்,
பறிமுதல் செய்யப்பட்டு புத்தளத்துக்;கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸ்
தரப்பு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version