Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் கிடைத்துள்ள பெருந்தொகை டொலர் வருமானம்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் கிடைத்துள்ள பெருந்தொகை டொலர் வருமானம்

0

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் 2024 ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கிடைக்கப்பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய வங்கி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள்

இதேவேளை,கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28,003 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 175,163 ஆகும்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://tamilwin.com/article/huge-income-from-sri-lankans-in-vauinat-1731111201

NO COMMENTS

Exit mobile version