Home இலங்கை பொருளாதாரம் அரச வாகன விற்பனையால் பெரும் நட்டம்!

அரச வாகன விற்பனையால் பெரும் நட்டம்!

0

அரச வாகனங்களை அரசாங்கம் விற்பனை செய்ததன்; மூலம் அரசுக்கு பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, இந்த விவகாரம்
தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் முறையிடவுள்ளதாக கூறியுள்ளார்.

பொது ஏலத்தில் வாகனங்களை விற்காமல், கேள்விப்பத்திர நடைமுறையை ஏற்றுக்கொண்டதன்
மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்
தெரிவித்துள்ளார்.

பொது ஏலம்

பொது ஏலத்தில் வாகனங்கள் விற்கப்பட்டிருந்தால் அரசுக்கு சுமார் 650 முதல் 700
மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைத்திருக்கும்.

எனினும் கேள்விப்பத்திர முறையில் 17 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம்
அரசுக்கு 200 மில்லியன் ரூபாய் மட்டுமே வருமானம், கிடைத்துள்ளதாக தயாசிறி
ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version