Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணம்(Jaffna) குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கஞ்சா பொதிகள் இன்றையதினம்(11.06.2024) யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்ய நடவடிக்கை 

இதன்போது கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/huge-recovery-of-kerala-ganja-in-jaffna-1718128821

NO COMMENTS

Exit mobile version