Home இலங்கை சமூகம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

0

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் (02) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை மாவட்ட நீதீவான் நீதிபதி நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெரமுனவின் ஆசீர்வாதம் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவார்: மகிந்த பகிரங்கம்

மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்

இந்த நிலையில் அண்மையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்து கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்திவிட்டு அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.

அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இன்று ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version