Home இலங்கை சமூகம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு உதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு உதவி

0

இலங்கைக்கு நிவாரண உதவியாக  50,000 அமெரிக்க டொலர் நிதி உதவியையும், 25,000 டின் மீன் பெட்டிகளை நன்கொடையாகவும் வழங்க மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது.

‘தித்வா ‘ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு உதவி செய்யும் முகமாக, மாலைதீவு மக்கள் சார்பாக  நிவாரண உதவிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாலைதீவு வெளியுறவு அமைச்சு

நெருங்கிய மற்றும் நட்பு நாடு என்ற வகையில் இலங்கை மக்களுக்கு உதவுவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் மக்களின் ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த நன்கொடை அமையும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version