முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி : பின்னர் நடந்த விபரீதம்

மதுபோதையில் வந்து மனைவியை நாளாந்தம் அடிக்கும் கணவனை அயலவர்களின் உதவியுடன் மின்கம்பத்தில் கட்டி வைத்து மனைவி உட்பட்ட சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.உயிரிழந்தவர் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மதுவிற்கு அடிமையானதால் மனைவியுடன் சண்டை

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் கணவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

மதுபழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி : பின்னர் நடந்த விபரீதம் | Husband Came Drunk Wife Sentenced Him To Death

அதேபோன்று நேற்று இரவும் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.

இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மதபோதகர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சர்ச்சைக்குரிய மதபோதகர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மின்கம்பத்தில் கட்டி வைத்து

பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த கணவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி : பின்னர் நடந்த விபரீதம் | Husband Came Drunk Wife Sentenced Him To Death

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்