தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளைச்சிமுறைப்புப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி தொட்டியினை
பார்வையிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபாய் செலவில்
புனரமைக்கப்பட்ட மீன்தொட்டி தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் காட்டு பற்றைகளாக
காணப்படுகின்றது.
இந்த மீன்தொட்டிகள் மூன்றும் பயன்பாட்டில் கொண்டு
வந்து நன்னீர் மீன்பிடி வளர்ப்பின் மூலம் பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த
முடியும் எனவும் அத்தோடு தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில், இவற்றை சீர் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

