Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டோர் கைது

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டோர் கைது

0

Courtesy: Thavaseelan

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒன்பது கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஒன்பது கடற்றொழிலாளர்களும் இன்று(09.04.2025) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புக்களில்
சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துமாறு
தொடர்ச்சியாக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மிக தீவிரமாக
சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கான அணி ஒன்று செயற்பட்டு வருகின்றது. 

சட்டவிரோத கடற்றொழில்

அந்தவகையில் இன்றையதினம் (09.04.2025) அதிகாலை கடலில் சட்டவிரோத தொழிலில்
ஈடுபட்ட இரண்டு படகுகள் மற்றும் வலைகளும் மீன்பிடி உபகரணங்களும்
கைப்பற்றப்பட்டிருந்தது. அத்தோடு ஒன்பது சந்தேக நபர்களும் கைது
செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முல்லைத்தீவு
மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் முல்னிலைப்படுத்தப்பட்ட
நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (08) மற்றும் நேற்று முன்தினம்(07) ஆகிய தினங்களில் இவ்வாறு
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version