சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அதிகாரிகள் முற்றுகையிட்டு அங்கிருந்து பெருந்தொகையான எரிபொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (18) மாலை வரக்காபொல பிரதேசத்தின் மாஹேன பகுதியில் நடைபெற்றுள்ளது.
இரகசிய தகவல்
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 790 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரக்காபொல, தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
