Courtesy: Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் 02ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.
முக்கிய விடயங்கள்
இந்நிலையில், இந்த சந்திப்பின் போது, நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டமைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறும் எனவும் அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சர்வதேச நாணய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.