Home இலங்கை பொருளாதாரம் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து IMFஇன் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து IMFஇன் தீர்மானம்

0

Courtesy: Sivaa Mayuri

அடுத்த ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அரசாங்கம் அறிவித்துள்ள முன்கூட்டிய தனிநபர் வருமான வரிக் குறைப்புத் திட்டம் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு 25 பில்லியன் ரூபாய்கள் இழப்பு ஏற்படும்.

எனினும் இந்த வரிக்குறைக்கப்பட்டாலும், நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகள் எட்டப்படுகின்றன என்ற அடிப்படையிலேயே, இது தொடர்பான கோரிக்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வரிச்சுமையை குறைக்கும் உத்தேசம்

யோசனையின்படி. 500,000 ரூபாயிலிருந்து 720,000 ரூபாயாக வரி வரையறை அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை தவிர வெவ்வேறு வருமான நிலைகளுக்கான வரிச்சுமையை குறைக்கும் உத்தேசத்தை திறைசேரி சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, 150,000 ரூபாய் மாத வருமானத்திற்கான குறைப்பு 14 சதவீதமாக இருக்கும். மற்ற குறைப்புகள்: 200,000 ரூபாய்கள் 20 சதவீதம், 300,000 ரூபாய்க்கு 25 சதவீதம், 400,000 ரூபாய்க்கு 23 சதவீதம், 500,000 ரூபாய்க்கு 15 சதவீதம், 750,000 ரூபாய்களுக்கு 8 சதவீதம், ஒரு மில்லியனுக்கு 6 சதவீதமாக இருக்கும்.

இந்தநிலையில் தமது திட்டங்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும்;, அதன் பின்னர் அவை, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது

உத்தேச சம்பள அதிகரிப்பு 

இதேவேளை உத்தேச சம்பள அதிகரிப்பின்படி அரச பணியாளர்களில் அலுவலக உதவியாளர்களுக்கு 5,450 ரூபாயாலும், சாரதிக்கு 6,900 ரூபாயாலும்;, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 8,430 ரூபாயாலும், தாதி ஒருவரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், பாடசாலை அதிபரின் சம்பளம் 23,425 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கல்வியியல் கல்லூரி தகுதியுடைய ஆசிரியருக்கு 17,480 ரூபாயாலும் பட்டதாரி ஆசிரியருக்கு 19,055 ரூபாயாலும், பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 10,740 ரூபாயாலும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது

ஆயுதப் படைகள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கும் இந்த சம்பள உயர்வு பொருந்தும்.

இந்தநிலையில் உத்தேச சம்பள அதிகரிப்பு காரணமாக அரசுக்கு வருடாந்தம் 160 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது 

NO COMMENTS

Exit mobile version