தற்போது யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக இரண்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்கு நோயின் தாக்கம் பற்றி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்த முழுமையான விபரங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/alDqXO4fi_c