Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E. A/L Examination) இணைய வழி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த கால அவகாசம் இந்த மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கால அவகாசம் நாளைய (10.07.2024) தினத்துடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உயர்தரப் பரீட்சை

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இது நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், 12ஆம் திகதிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எந்தவொரு காரணத்துக்காகவும் நீடிக்கப்படாது எனவும் திணைக்களத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version