Home இலங்கை சமூகம் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

0

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கான அறிவுறுத்தல்

இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் மேலும் தெரிவிக்கையில்,

சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்த வேண்டும். மண்சரிவு, பனிமூட்டம், பலத்த மழை, காற்று மற்றும் வழுக்கும் வீதிகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் இரவு நேரங்களில் ஒளிவிளக்குகளை மங்கச் செய்யாமல் வாகனத்தைச் செலுத்துமாறும் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version