Home இலங்கை சமூகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்யும் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்யும் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா- சமாச்சதீவு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி இன்று
(5) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான
குழுவினரால் ஆரம்பம்பிக்கப்பட்டன.

தற்போது வெள்ளம் வடிந்தோடி இருந்தாலும் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் பலர்
தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

எனவே தம்மால் முடிந்த உதவிகளை நாமும் அவர்களுக்கு செய்வோம் எனவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை 

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை 341 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version