Home ஏனையவை வாழ்க்கைமுறை வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி

வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி

0

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று காலை அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சோற்று பொதியினை கொள்வனவு செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் பல்லியை அவதானித்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனையின் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரிடமும் நோயாளி முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை பொது சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் தகவல் வெளியிட அவர் மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொது சுகாதார ஆய்வாளர் நுவான் கெகுலந்தரவும் விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும், வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version