Home இலங்கை சமூகம் அதிகரிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்

அதிகரிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்

0

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (12) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டணங்கள் அதிகரிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு பிணைக் வைப்புத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தங்களுக்கு அமைவான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செலுத்தப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version