Home ஏனையவை வாழ்க்கைமுறை உலகளவில் 100000 பேரில் 3340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக தகவல்

உலகளவில் 100000 பேரில் 3340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக தகவல்

0

உலகளவில் 100,000 பேரில் 3340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்திய நிபுணர் இதனை கூறியுள்ளார்.

இன்ஹேலர் சிகிச்சை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருக்கிறது. “இன்ஹேலர்” சிகிச்சையானது பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்துமாவை மிகச் சிறப்பாக குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆஸ்துமா இருந்தாலும், இந்த நாட்டில் அது கண்டறியப்படாத நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version