முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை : உவராகும் விளைநிலங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனையால் வளமான
விளைநிலங்கள் உவராகும் தன்மை அதிகரித்து வருவதாக விவசாய ஆராய்ச்சி பிரிவின்
மேலதிக பணிப்பாளர் எஸ் ராஜேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பெருந்தொகையான
காணிகளில் தற்போது உவர் தன்மை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஐயாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள்

குறிப்பாக பூநகரி அக்கராயன்குளம் தட்டுவன்கொட்டி கண்டாவளை ஊரியான் போன்ற
பகுதிகளில் இவ்வாறு விவசாய நிலங்கள் மிக வேகமாக உவராகி வருகின்றன.

ஏற்கனவே கானப்பட்ட உவர் நீர் தடுப்பணைகள் அழிவடைந்துள்ளமை மற்றும்
அதிகரித்த இரசாயன உரப்பாவனை என்பவற்றின் விளைவாகவே இவ்வாறு உவர் பரம்பல்
அதிகரித்து வருகின்றன என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை : உவராகும் விளைநிலங்கள் | Increasing Use Chemical Fertilizers

விவசாயிகள் சேதன உரத்தினை விளைநிலங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும்
மாறாக விவசாயிகள் தொடர்சியாக இராசயன உரங்களை பாவிப்பதால் வளமான விளை நிலங்கள்
உவரடைந்து வருகின்றன.

இது தொடர்பில் விவசாயிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ள விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்
ராஜேஸ்கண்ணா கடல் நீர் உட்பகுவதால் மட்டும் உபத்தன்மை ஏற்படுவதில்லை
பல்வேறு இடங்களிலும் பெறப்பட்ட மண் மாதிரிகளை பரிசோதனைகளுக்கு உட்படுத்திய
போது அநேக இடங்களில் உவர்த்தன்மை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த இரசாயன உரப்பாவனை மற்றும் அங்கீகரிக்கப்படாத இரசாயன உரங்களை
பயன்படுத்துதல் என்பன காரணமாக அதிகளவான உவர் பரம்பல் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக ஐயாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் இவ்வாறு உவர் நிலங்களாக
மாறி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டம் மற்றும் இரணைமடு
பயிர் செய்கை குழு கூட்டம் என்பவற்றிலும் குறித்த
விடயத்தினை- வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.