Home விளையாட்டு கிண்ணத்தை தொட மறுத்த இந்தியா – பஹல்கம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளம்

கிண்ணத்தை தொட மறுத்த இந்தியா – பஹல்கம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளம்

0

புதிய இணைப்பு

ஆசியக் கிண்ணத் தொடருக்கான தனது ஊதியத்தை பஹல்கம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்குக் கொடுக்க விரும்புவதாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் (Suryakumar Yadav) அறிவித்துள்ளார்.   

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவின் வேதனத்தை ரூ. 28 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி (India) கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

குறித்த விடயத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி அதிக அளவில் வெளிப்படுவதை காண கூடியதாக உள்ளது.

கிண்ணமின்றி வெற்றியைக் கொண்டாடியது

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9 ஆவது ஆசிய கிண்ணம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் வெற்றி அணிக்கு கிண்ணத்தை வழங்குவதற்கு ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொக்சின் நஹ்பியுடன் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இந்திய அணி அவர்களிடம் இருந்து கிண்ணத்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்

இதனிடையே, இந்திய அணி கிண்ணமின்றி வெற்றியைக் கொண்டாடியது. இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணியின் தலைவர் ரோகித் கிண்ணத்தை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய அணியின் தற்போதைய தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

எனினும், வெற்றிக் கிண்ணமும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்கு மீள வழங்கப்படும் என நம்புவதாகவும் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கிண்ணத்தைப் பெற்றுக் கொள்ளாததால் ஆசியக் கிண்ண நிர்வாகம் கிண்ணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version