Home இலங்கை சமூகம் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு தண்டனை விலக்கு

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு தண்டனை விலக்கு

0

இந்தியாவுக்கு (India) அதிகளாக சென்றுள்ள இலங்கைத் (Sri Lanka) தமிழர்களுக்கு தண்டனைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இந்திய உள்துறை
அமைச்சு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், 2025 ஜனவரி ஒன்பதாம் திகதிக்கு முன்னர்,இந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ்
அகதிகளுக்கே இந்த தண்டனை விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அகதிகள்

இந்தநிலையில், இலங்கை தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள், பயண
ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கும்
தண்டனை வழங்கப்படாது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கையின்
தமிழ் அகதிகள்,விசா கட்டணங்கள் மற்றும் தங்கியிருக்கும் காலத்தை விட அதிக
காலம் இந்தியாவில் தங்கியிருந்தால், அதற்குரிய அபராதங்களையும் உள்துறை அமைச்சு
தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version