Home இலங்கை சமூகம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை : அம்பலமாகும் புதிய தகவல்

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை : அம்பலமாகும் புதிய தகவல்

0

கொழும்பு (Colombo) துறைமுகத்தில் போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலையை நிறுவ இந்தியா (India) தயாராகி வருவதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட (Pubudu Jagoda) தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் முக்கியமானவர்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை ஏழு என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்திய ஊடகங்கள் 10 என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் இந்திய இராணுவ ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை நிறுவுவது குறித்த விவரங்களை இந்திய பாதுகாப்புச் செயலாளரே இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான விடயங்கள் மற்றும் தற்போது சம காலத்தில் அதிகம் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “சமகாலம்” நிகழ்ச்சி. 

https://www.youtube.com/embed/nSKV9KGOKqg

NO COMMENTS

Exit mobile version