இந்தியா-இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன்படி, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் அனுசரணையின் கீழ் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளும் இணையதளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
