முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 ஆம் திகதி ஐதராபாத்தில் தொடங்குகிறது, இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி தொடங்குகிறது.

குறித்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

விலகுவதற்கான காரணம்

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ, அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசிய விராட் கோலி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையானதாக இருக்கும்.

அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இப் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம் | India Vs England Test Virat Kohli Ruleout Trending

மேலும், அவரது முடிவை பிசிசிஐ மதிப்பதாகவும் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கோலிக்கு பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் மற்றும் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கான் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 7000 உட்பட 20,000 க்கும் மேற்பட்ட முதல் தர ஓட்டங்களை எடுத்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா விளையாடவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..!

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்